
ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து நிற்கிறார் ஆயிஷா பேகம் என்ற தாய்! இப்படி ஒரு மகனை பெறுவதற்கு இந்தத் தாய் என்ன தவம் செய்தாளோ என்ற பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறான். அவருடைய மகன் சையது அப்துல் ரசாக்.
ஆறாவது படிக்கும் பதினோரு வயது பள்ளி மாணவனான அப்துல் ரசாக் தாயின் இதய ஆபரேஷனுக்காக தனியாளாக ஓடியாடி மக்களிடம் இருந்து 83 ஆயிரம் நிதி திரட்டியிருக்கிறான். இரண்டு லட்சம் ரூபாய் இருந்தால் தான் ஆபரேசன் என்ற நிலையில் அப்துல் ரசாக்கின் கைகளில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை கொடுத்து அவனுடைய முயற்சிக்கு மரியாதை செய்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
வளர்ந்து ஆளான பிள்ளைகள்கூட பெற்றோரை கண்டுகொள்ளாமல் தவிக்க விட்டுவிட்டுப் போகும் காலகட்டத்தில் இந்த சின்ன வயதிலேயே பொறுப்பாக அம்மாவை கவனித்துக் கொள்ளும் ரசாக் நிகழ்கால சமுதாயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக்த்தான் நம்முன் ஒளிர்கிறான்.
நன்றி : ஜுனியர் விகடன்
4 comments:
அனைவரும் தெரிந்துக்கொள்ளவேண்டிய நல்ல செய்தியை பதிவாக போட்டிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் காயத்ரி!
வீ எம்
அருமையான செய்தி,
தொடர்ந்து மற்ற அரசியல் தலைவர்கள் சம்பந்தமா இதே மாதிரி பதிவுகளப் பொட்டுருங்க. இல்லாட்டி உங்களை அம்மாக் கட்சின்னு முத்திரை குத்திருவாங்க..
(ஹி..ஹி.. சும்மா ஜோக்குங்க.. நெஜம்மா நடந்தாலும் ஆச்சரியப் படறதுக்கில்ல...)
அருமை காயத்ரி.....மகன் தாய்க்கு ஆற்ற வேண்டிய கடமை. இந்த வயதில் எத்தனை உறுதி...அந்தத் தாய் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
அன்புடன்,
கோ.இராகவன்
சையது அப்துல் ரசாக்கிற்கு ஒரு சல்யூட்
Post a Comment