சிவகாசி : சிவகாசி தாலுகா, மேட்டுப்பட்டி அருகே உள்ள கிராமம் பூசாரிபட்டி. ராஜகம்பளத்தார் என்னும் ஒரே சமுதாயத்தை பல குடும்பங்கள் இருந்தாலும், பெருமாள்சாமி (65)யின் சகோதர, சகோதரிகள் என 15குடும்பங்களை சேர்ந்த 90 பேர் ஒரே குடும்பமாக பல ஆண்டுகளாக கூட்டுக்குடித்தனமாக வாழ்க்கை நடத்துகின்றனர்.
கிராமத்திலேயே பெருமாள் சாமிதான் முதல் பட்டதாரி. இவர் கூட்டு குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற சூழ்நிலையால் 1974ல் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து குடும்ப பொறுப்பை ஏற்றார். கூட்டு குடும்பத்திற்கு இவர்தான் தலைவர். இவர்களின் மூதாதையர் காலத்தில் இருந்தே இன்று வரை ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். இவர்களின் ஒரு ஆண்டு தேவைக்கான நெல், நவதானியங்கள், காய்கறிகளை சொந்த நிலங்களில் சாகுபடி செய்து சேமித்து கொள்கின்றனர். கடைகளில் விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் என்றால் உப்பு, சீனி, டீ, காபி தூள்தான். ஆண்டுக்கு 500 மூடை நெல், 500 மூடை தானியங்கள் விளைவிக்கின்றனர்.
தினமும் மூன்று வேளை உணவுக்காக 1 மூடைக்கு குறைவில்லாமல் அரிசி, தானியங்கள் செலவிடப்படுகிறது. தீபாவளி, பொங்கல், ஆடி விசேஷ நாட்களில் 5,6 ஆடு வெட்டி அசைவ உணவு சாப்பிடுகின்றனர். அனைவரும் தினமும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து அன்றாட பணிகளை துவக்கி விட வேண்டும் என்பது கட்டாயம். காலையில் கூல் குடித்து வேலைக்கு சென்று விடுவார்கள். ஆணும்,பெண்ணும் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தும் அளவிற்கு கடின உழைப்பாளிகள். மதிய உணவினை அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கே சென்று வழங்க அதற்கென தனியாக ஆட்கள் உள்ளனர். மாலை ஆறரை மணிக்கு எல்லோரும் வீடு திரும்பி விட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஒவ்வொருவருக்கும் பணி ஒதுக்கப்பட்டு விடும்.
சமையலுக்கு பெண்களும், தோட்டத்தில் களை எடுத்தல், உழவு, தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல் வேலைகளை ஆண், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு விடும். சொந்தமாக நடத்தம் 2 பட்டாசு ஆலைகளில் குடும்ப ஆண்கள் 30 பேர் வேலை செய்கின்றனர். குடும்ப நிர்வாகம், வரவு, செலவு என ஒவ்வொரு வரும் ஒரு பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றனர். படிக்கும் வயது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவர்கள் விரும்பிய வரை பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படிக்கலாம். குறைந்த பட்சம் 8ம் வகுப்பு,10ம் வகுப்பு, பிளஸ்2 வரை படித்துள்ளனர். அதன்பின் சொந்த வேலைகளை கவனிக்க வந்துவிடுவார்கள். படிப்பில் ஆர்வம் உள்ளோர் தொடரலாம்.
பெருமாள்சாமியின் மகன் பி.இ., முடித்து லண்டனில் வேலை செய்து, பெங்களூரூவில் உள்ளார். முத்துக்குமார் பி.சி.ஏ., படிக்கிறார். மற்றொரு பெண் பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.இவர்கள் வெளியில் திருமணம் செய்வது இல்லை. உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்கின்றனர். வீட்டின் மூத்தவர் இன்னாருக்கு இன்னார் என மணமக்களை நிச்சயிப்பார் இதில் மறுப்பே இருக்காது. படித்து வெளியிடங்களில் வேலை பார்த்தாலம் இங்குள்ளவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என எழுதப்படாத சட்டம். பெண்களுக்கு 18 வயதில் திருமணம் செய்கின்றனர். நான்கு ஆண்டுக்கு ஒரு முறை 9ஜோடி, 11ஜோடிகளுக்கு மொத்தமாக திருமணம் நடத்துகின்றனர்.
இக் குடும்பத்திற்கு 100 ஏக்கர் நிலங்கள் இருந்தாலும் அந்தந்த குடும்ப தலைவர்கள் பெயரில் சொத்து பத்திரம் இருக்கும். ஆனால் எல்லாம் பொதுவுடமை சொத்து. பண்டிகை நாட்களில் புது துணிகள் மொத்தமாக ரூ.1 லட்சத்திற்கு எடுத்து வருகின்றனர். வீட்டில் உள்ள மூத்த பெண், பெண்களுக்கு புடவைகளை எதை கொடுக்கிறாறோ அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கின்றனர்.உறவு திருமணங்களால் குறைபாடுடைய குழந்தை பிறக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. ஆனால் உறவு திருமணங்களால் ஆண்டவன் கிருபையால் எவ்வித குறைபாடும் இன்றி நலமாக உள்ளதாக பெருமைப்படுகின்றனர்.
பெருமாள்சாமி கூறுகையில், ஆண்டாண்டு காலமாக கூட்டு குடும்பமாக வசிக்கின்றோம். இதே போல் ஒற்றுமையுடன் அதிகம் பேருடன் வசிக்க வேண்டும் என ஆசை. எல்லோரும் கடினமாக உழைப்பதாலும், பாராம்பரிய உணவு பழக்கவழக்கத்தால் எவ்வித குறைபாடு இன்றி சுகமாக வாழ்கின்றோம் என தெரிவித்தார்.
Thanks
Dinamalar
October 05, 2009
April 21, 2008
Photo lighting software
|
June 23, 2005
சினிமாவை மிஞ்சும் லட்சிய கிராமம்
இந்த வாரம் ஜுனியர் விகடனில் கிராண்ட்லைன் என்ற கிராமத்தை பற்றி படிக்க நேர்ந்தது. முன்னேறி வரும் இது போன்ற நம் தமிழக கிராமங்களை பற்றிய செய்தி மகிழ்ச்சி அளிப்பதால் அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் நிச்சயம் பாரட்டப்பட வேண்டியவர்.
"கமல் நடிச்ச 'உன்னால் முடியும் தம்பி' படம் பார்த்திருக்கீங்களா ? அதுல கதாநாயகனோட கிராமம். அவனோட முயற்சியால தன்னிறைவு அடைஞ்ச கிராமமா முன்னேறி இருக்கும். அது சினிமா அதுக்கு ஒரு படி மேலேயே முன்னேறி இருக்கு சென்னை அருகே இருக்கும் செங்குன்றம் பக்கத்தில் உள்ள கிராண்ட்லைன் என்ற கிராமம்.

தெருக்களில் நடை போட்ட போது ஊரின் மையப் பகுதியில் 'விழி தந்து ஒளி தந்தோர்' என்று தலைப்பிட்டு கண்தானம் செய்தவர்களின் பட்டியலை கொட்டை எழுத்துக்களில் ஒளிர விடிருக்கிறார்கள்.ஊர் பஞ்சாயத்துத் தலைவர் ஜகதீசன் "இது வரை 320 பேர் கண்தானம் செய்ய பதிவு செய்திருப்பதாக பெருமையாகச் சொன்னார்.
அப்படியே நாம் கண்களை ஊருக்குள் ஓட்டிய போது.. "கிராண்லைன் ஊராட்சி மளிகைக் கடை" என்ற போர்டு நம்மை ஈர்த்தது.ஊருக்குள்ள இளவட்ட பசங்க படிச்சுட்டு வேலை இல்லாம இருக்காங்க. அவங்கள்ல அஞ்சு பேருக்காவது வேலை கொடுக்க ஆரம்பிச்சதுதான் இந்தக் கடை. இந்த கடையின் மூலமா வேலை வாய்ப்பு பெற்றவர்களில் இரண்டு பேர் உடல் ஊனமானவர்கள்.கடையின் மூலமா ஊராட்சிக்கும் ஓரளவு வருமானம் கிடைக்குது. மக்களுக்கும் தரமான பொருள்கள் கிடைக்குது.
அடுத்து அவர் நம்மை அழைத்துச் சென்றது பெரியார் திடலுக்கு! அந்தட் திடலில் சமூக நலக்கூடம், மகளிர் சுய உதவிக் குழு கட்டடம், பெண்கள் தையல் கூடம், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, சமையல் கூடம் என வரிசையாக கட்டடங்கள்.
முதலில் சமூக நலக்கூடம். இரண்டு அடுக்கில் நவீன வசதிகளுடன் உள்ள இந்த கூடத்தில் தான் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பல வி. பி க்களின் குடும்ப விழாக்கள் நடக்கிறதாம். பெண்களுக்கு தையல் பயிற்சி கொடுப்பதற்காக இலவச தையல் இயந்திரங்கள் வாங்கி வைத்துள்ளார்கள். கிராமத்துப் பெண்கள் தினமும் இந்த இயந்திரங்களை பயன்படுத்தி தையல் செய்து சம்பாதித்து வருகின்றனர்.
இந்த ஊரில் தினசரி மதியம், ராத்திரி ரெண்டு வேலையும் முப்பது நாப்பது பேருக்கு சமையல் நடந்துகிட்டே இருக்கும். ஆதரவற்ற வயதானவங்களுக்காகத்தான் இதை ஏற்பாடு பண்ணியிருக்கிறோம்."இத்தனை பேருக்கு தினமும் இரண்டு வேலை சாப்பாடு போடுவதற்கு நிறைய செலவாகுமே. எப்படி?" நாம் ஆச்சரியத்துடன் கேட்க, "ஊருக்கு பொதுவான இடத்தில் சமையலுக்கு தேவையான காய்கறிகளை விளைவிக்கிறோம்.நிறைய விளையுது. சாப்பாட்டுக்கு பயன்படுத்தினது போக் மீதி காய்கறிகளை விற்பனை செய்கிறோம். சாந்தியும் அவருடைய அம்மாவும் இங்கே சமையல் வேலை செய்கிறார்கள். ஆண் துணையின்றி இருக்கும் இருவருக்கும் உதவும் வகையில் இந்த வேலையை கொடுத்திருக்கிறார்கள்.
ஜெகதீசன் நம்மிடம் "அரசாங்கத்துக்கிட்ட எல்லாத்துக்கும் அனுமதி வாங்கித்தான் செய்யனும்னா இதுவரைக்கும் செஞ்சதுல பாதியைக்கூட செஞ்சுருக்க முடியாதுங்க. நாங்க மளிகைக் கடை ஆரம்பிச்சப்ப அதிகாரிங்க முதல்ல ஆனா, அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாம மக்கள் நலனை மட்டும் மனசுல வெச்சு எங்க ஊராட்சி சார்பா எல்லா வேலைகளையும் செய்தோம். எங்க நல்ல மனச புரிஞ்சுகிட்டு அதிகாரிகளும் கைகொடுக்க. எங்க ஊர் நல்ல மாதிரி முன்னேறிக்கிட்டே இருக்கு.
ஊருக்குள் நாம் கண்டது
* ஒவ்வொரு வீட்டு முன்பும் மக்கும், மக்க குப்பைக்கென இரண்டு குப்பை கூடைகள்.
* ஊருக்கு பொதுவான் உடற் பயிற்சி கூடம்
* எல்லா வீடுகளிலும் அரசின் மானியத்தோடு கட்டப்பட்ட நவீன கழிப்பிடம்
* கிராமத்தின் அனைத்து சாலைகளும் கான்கரீட் சாலைகளாக பளபளக்கின்றன. எல்லாம் நமக்கு நாமே திட்டத்தில் போடப்பட்டவையாம்.

June 21, 2005
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாய்

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து நிற்கிறார் ஆயிஷா பேகம் என்ற தாய்! இப்படி ஒரு மகனை பெறுவதற்கு இந்தத் தாய் என்ன தவம் செய்தாளோ என்ற பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறான். அவருடைய மகன் சையது அப்துல் ரசாக்.
ஆறாவது படிக்கும் பதினோரு வயது பள்ளி மாணவனான அப்துல் ரசாக் தாயின் இதய ஆபரேஷனுக்காக தனியாளாக ஓடியாடி மக்களிடம் இருந்து 83 ஆயிரம் நிதி திரட்டியிருக்கிறான். இரண்டு லட்சம் ரூபாய் இருந்தால் தான் ஆபரேசன் என்ற நிலையில் அப்துல் ரசாக்கின் கைகளில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை கொடுத்து அவனுடைய முயற்சிக்கு மரியாதை செய்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
வளர்ந்து ஆளான பிள்ளைகள்கூட பெற்றோரை கண்டுகொள்ளாமல் தவிக்க விட்டுவிட்டுப் போகும் காலகட்டத்தில் இந்த சின்ன வயதிலேயே பொறுப்பாக அம்மாவை கவனித்துக் கொள்ளும் ரசாக் நிகழ்கால சமுதாயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக்த்தான் நம்முன் ஒளிர்கிறான்.
நன்றி : ஜுனியர் விகடன்
Subscribe to:
Posts (Atom)