June 23, 2005

சினிமாவை மிஞ்சும் லட்சிய கிராமம்

இந்த வாரம் ஜுனியர் விகடனில் கிராண்ட்லைன் என்ற கிராமத்தை பற்றி படிக்க நேர்ந்தது. முன்னேறி வரும் இது போன்ற நம் தமிழக கிராமங்களை பற்றிய செய்தி மகிழ்ச்சி அளிப்பதால் அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் நிச்சயம் பாரட்டப்பட வேண்டியவர்.

"கமல் நடிச்ச 'உன்னால் முடியும் தம்பி' படம் பார்த்திருக்கீங்களா ? அதுல கதாநாயகனோட கிராமம். அவனோட முயற்சியால தன்னிறைவு அடைஞ்ச கிராமமா முன்னேறி இருக்கும். அது சினிமா அதுக்கு ஒரு படி மேலேயே முன்னேறி இருக்கு சென்னை அருகே இருக்கும் செங்குன்றம் பக்கத்தில் உள்ள கிராண்ட்லைன் என்ற கிராமம்.



தெருக்களில் நடை போட்ட போது ஊரின் மையப் பகுதியில் 'விழி தந்து ஒளி தந்தோர்' என்று தலைப்பிட்டு கண்தானம் செய்தவர்களின் பட்டியலை கொட்டை எழுத்துக்களில் ஒளிர விடிருக்கிறார்கள்.ஊர் பஞ்சாயத்துத் தலைவர் ஜகதீசன் "இது வரை 320 பேர் கண்தானம் செய்ய பதிவு செய்திருப்பதாக பெருமையாகச் சொன்னார்.

அப்படியே நாம் கண்களை ஊருக்குள் ஓட்டிய போது.. "கிராண்லைன் ஊராட்சி மளிகைக் கடை" என்ற போர்டு நம்மை ஈர்த்தது.ஊருக்குள்ள இளவட்ட பசங்க படிச்சுட்டு வேலை இல்லாம இருக்காங்க. அவங்கள்ல அஞ்சு பேருக்காவது வேலை கொடுக்க ஆரம்பிச்சதுதான் இந்தக் கடை. இந்த கடையின் மூலமா வேலை வாய்ப்பு பெற்றவர்களில் இரண்டு பேர் உடல் ஊனமானவர்கள்.கடையின் மூலமா ஊராட்சிக்கும் ஓரளவு வருமானம் கிடைக்குது. மக்களுக்கும் தரமான பொருள்கள் கிடைக்குது.

அடுத்து அவர் நம்மை அழைத்துச் சென்றது பெரியார் திடலுக்கு! அந்தட் திடலில் சமூக நலக்கூடம், மகளிர் சுய உதவிக் குழு கட்டடம், பெண்கள் தையல் கூடம், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, சமையல் கூடம் என வரிசையாக கட்டடங்கள்.

முதலில் சமூக நலக்கூடம். இரண்டு அடுக்கில் நவீன வசதிகளுடன் உள்ள இந்த கூடத்தில் தான் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பல வி. பி க்களின் குடும்ப விழாக்கள் நடக்கிறதாம். பெண்களுக்கு தையல் பயிற்சி கொடுப்பதற்காக இலவச தையல் இயந்திரங்கள் வாங்கி வைத்துள்ளார்கள். கிராமத்துப் பெண்கள் தினமும் இந்த இயந்திரங்களை பயன்படுத்தி தையல் செய்து சம்பாதித்து வருகின்றனர்.

இந்த ஊரில் தினசரி மதியம், ராத்திரி ரெண்டு வேலையும் முப்பது நாப்பது பேருக்கு சமையல் நடந்துகிட்டே இருக்கும். ஆதரவற்ற வயதானவங்களுக்காகத்தான் இதை ஏற்பாடு பண்ணியிருக்கிறோம்."இத்தனை பேருக்கு தினமும் இரண்டு வேலை சாப்பாடு போடுவதற்கு நிறைய செலவாகுமே. எப்படி?" நாம் ஆச்சரியத்துடன் கேட்க, "ஊருக்கு பொதுவான இடத்தில் சமையலுக்கு தேவையான காய்கறிகளை விளைவிக்கிறோம்.நிறைய விளையுது. சாப்பாட்டுக்கு பயன்படுத்தினது போக் மீதி காய்கறிகளை விற்பனை செய்கிறோம். சாந்தியும் அவருடைய அம்மாவும் இங்கே சமையல் வேலை செய்கிறார்கள். ஆண் துணையின்றி இருக்கும் இருவருக்கும் உதவும் வகையில் இந்த வேலையை கொடுத்திருக்கிறார்கள்.

ஜெகதீசன் நம்மிடம் "அரசாங்கத்துக்கிட்ட எல்லாத்துக்கும் அனுமதி வாங்கித்தான் செய்யனும்னா இதுவரைக்கும் செஞ்சதுல பாதியைக்கூட செஞ்சுருக்க முடியாதுங்க. நாங்க மளிகைக் கடை ஆரம்பிச்சப்ப அதிகாரிங்க முதல்ல ஆனா, அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாம மக்கள் நலனை மட்டும் மனசுல வெச்சு எங்க ஊராட்சி சார்பா எல்லா வேலைகளையும் செய்தோம். எங்க நல்ல மனச புரிஞ்சுகிட்டு அதிகாரிகளும் கைகொடுக்க. எங்க ஊர் நல்ல மாதிரி முன்னேறிக்கிட்டே இருக்கு.

ஊருக்குள் நாம் கண்டது

* ஒவ்வொரு வீட்டு முன்பும் மக்கும், மக்க குப்பைக்கென இரண்டு குப்பை கூடைகள்.
* ஊருக்கு பொதுவான் உடற் பயிற்சி கூடம்
* எல்லா வீடுகளிலும் அரசின் மானியத்தோடு கட்டப்பட்ட நவீன கழிப்பிடம்
* கிராமத்தின் அனைத்து சாலைகளும் கான்கரீட் சாலைகளாக பளபளக்கின்றன. எல்லாம் நமக்கு நாமே திட்டத்தில் போடப்பட்டவையாம்.

3 comments:

Dreamzz said...

அழகு! வாழ்க கிராமங்கள் :) வளர்க தமிழ் மக்கள்

Anonymous said...

நல்ல தகவல் வாழ்த்துக்கள் கிராண்ட்லைன் கிராமத்துக்கும், செய்தியை வெளியிட்ட ஜுனியர் விகடனுக்கும், செய்தியை எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கும்.

அறிவகம் said...

நல்ல தகவல் வாழ்த்துக்கள் கிராண்ட்லைன் கிராமத்துக்கும், செய்தியை வெளியிட்ட ஜுனியர் விகடனுக்கும், செய்தியை எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கும்.அறிவகம் உங்களை வரவேற்கிறது.